12ம் வகுப்பு மாணவன் திடீர் உயிரிழப்பு: இரவோடு இரவாக அடக்கம் செய்த பெற்றோர்

12ம் வகுப்பு மாணவன் திடீர் உயிரிழப்பு: இரவோடு இரவாக அடக்கம் செய்த பெற்றோர்
X

பைல் படம்.

Salem News Today: சேலத்தில் 12ம் வகுப்பு மாணவன் திடீர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem News Today: சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெரு முதல் கிராஸில் வசித்து வருபவர் மாணிக்கம். இவருக்கு செல்வி என்ற மனைவியும், கிரி (வயது 18) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கிரி சமீபத்தில் முடிவடைந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த கிரி திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கிரியின் உடலை இரவோடு, இரவாக உறவினர்கள் மணியனூரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். ஆனால் போதை ஊசி செலுத்தியதால் மாணவர் இறந்து விட்டதாக தகவல் பரவி வந்தது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் வருவாய்த்துறையினர் மாணவரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கிரியின் தாயார். தனது மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும், அதனால் அவன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மாணவன் கிரியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை பெற்று உடலை தோண்டி எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிரியின் நண்பர்கள் யார்? அவர்களுக்கு ஏதேனும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி

சேலம் முகமது புறா பகுதியில் வசித்து வருபவர் முகமது இப்ராஹிம் (வயது 59). இவர் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இப்ராஹிம் நேற்று இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு டூவீலரில் வந்துள்ளார். அங்கு அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கவனித்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தீக்குளிக்க விடாமல் உடனடியாகி தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும் போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது புறா பகுதியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற மோதலில் ஷாஜகான் என்பவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில் இந்த மோதல் வழக்கு தொடர்பாக எனது மகனை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை

சேலம் கருப்பூர் அருகே உள்ள மஞ்சுளாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், (வயது 30) . இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு