சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டார்
பைல் படம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு. குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 230 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.34.50 இலட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள். புதிய ஆழ்துளை கிணறு. திறந்த வெளி கிணறு அமைத்து 10 குதிரை திறன் வரை புதிய மின் மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள் பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.
வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களான உதவி செயற்பொறியாளர். குமாரசாமிப்பட்டி. சேலம். 0427-2905277, 9751008321 என்ற அலுவலகத்தையும். உதவி செயற்பொறியாளர், நங்கவள்ளி ரோடு, கோனூர் அஞ்சல் 04298-230361. 8072310693 என்ற அலுவலகத்தையும். உதவி செயற்பொறியாளர். தென்னங்குடிபாளையம், ஆத்தூர், 04282-290585, 9543508877 என்ற அலுவலகத்தையும். உதவி செயற்பொறியாளர். சேலம் மெயின் ரோடு. சங்ககிரி 04283-290390, 8072663411 என்ற அலுவலகத்தையும், செயற்பொறியாளர். குமாரசாமிப்பட்டி. சேலம் 0427-2906266 என்ற அலுவலகத்தையும் சிறு, குறு விவசாயிகள் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu