சேலம் மாவட்டத்தில் சிறப்புத் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் சிறப்புத் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்புத் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்புத் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்புத் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (20.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்விற்குப்பின், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:

விவசாயிகளின் முக்கியத் தேவையான நீர் பாசன வசதிக்கு கோடை காலத்தில் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் வகையில் சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணிகள் 03.05.2023 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்புத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெற்றுவருவதை உறுதி செய்யும் வகையில் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இக்குழுவில் இடம்பெற்றுள்ள உழவர் குழு விவசாயிகளை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 31 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்திலேயே இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, உழவர் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இத்தூர்வாரும் பணிகள் கண்காணித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு தூர்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் முன்னோடி விவசாயிகள், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர், கிராம நிருவாக அலுவலர், தொடர்புடைய கிராமத்தின் ஊராட்சிச் செயலர் ஆகியோரை உள்ளடக்கிய உழவர் குழுக்கள் உதவி வேளாண்மை அலுவலர் அவர்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்குழுவானது வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள், பணிகளின் தரம் அல்லது தாமதம் குறித்த புகார்களைப் பெறுதல், எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் பணிகளை சுமூகமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

இன்றைய ஆய்வின்போது, கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கால அளவில் பணிகளை முடித்திடவும், மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்புத் தூர்வாரும் பணிகள் அனைத்தும் தரமாக அறிவுருத்தப்பட்டுள்ள வரன்முறைகளின்படி செய்து முடிக்கவும், இப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து அறிக்கை வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக, சேலம் மூக்னேரி, நெய்காரப்பட்டி, அம்மாபாளையம், திப்பம்பட்டி மற்றும் வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி, செயற்பொறியாளர் (சரபங்கா வடிநிலக் கோட்டம்) ஆனந்தன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு