தொடர் விடுமுறை: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறை: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

சேலம் பேருந்து நிலையம் - கோப்புப்படம் 

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products