வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட புகாரில் காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம்

சேலம் : வீரகனூா் அருகே வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாக காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்த கருப்பண்ணன் அண்மையில் மாற்றுப் பணியாக வீரகனூா் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றாா். இந்த நிலையில் இலுப்பநத்தம் சந்துக்கடை வியாபாரி செந்தில் (35) என்பவரிடம் லஞ்சமாக ரூ. 2500 தர வேண்டும் என கருப்பண்ணன் கேட்டுள்ளாா்.
ஆனால், வியாபாரம் குறைவாக உள்ளதால் ரூ. 1500 மட்டுமே தருவதாக செந்தில் கூறினாா்.
இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து சேலம் காவல் கண்காணிப்பாளா் கெளதம்கோயல், எஸ்.ஐ. கருப்பண்ணனை சேலம் ஆயுதப் படைக்கு இட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu