மாசி அமாவாசையையொட்டி சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.6 கோடிக்கு காய்கறிகள் விற்பனை!..

சேலம் : மாசி அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் வியாழக்கிழமை ரூ. 1.6 கோடிக்கு காய்கறிகள் விற்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை நாள்களில் காய்கறி, பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
மாசி அமாவாசை கூட்டம்
மாசி அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
காய்கறி வரத்து & விற்பனை விவரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் காய்கறிகள், பழங்கள் வரத்து 285.35 மெட்ரிக் டன்னாக இருந்தது. 68,105 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் வியாழக்கிழமை ஒரே நாளில் 1 கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu