சேலம் பாமக எம் எல் ஏ அருளை கண்டித்து தொகுதி மக்கள் போராட்டம்

சேலம் பாமக எம் எல் ஏ அருளை கண்டித்து தொகுதி மக்கள் போராட்டம்
X

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக எம் எல் ஏ அருள்

சேலம் பாமக எம் எல் ஏ அருளை கண்டித்து தொகுதி மக்கள் போராட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக எம் எல் ஏ அருளை கண்டித்து தொகுதி மக்கள் போராட்டம்நடத்தின். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால் 2000 ரூபாய் தருவதாக கூறி டோக்கன் வழங்கிவிட்டு தற்போது ஏமாற்றுவதாக புகார் தெரிவித்துள்ளனர்

சேலம் மாவட்டத்தில் எல்லோரும் உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்று சேலம் மேற்கு தொகுதியாகும். தமிழக முதல் அமைச்சரின் சொந்த கிராமம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையமாக இருந்தாலும், அவர் தங்கியுள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு இந்த தொகுதியில்தான் இடம்பெறுகிறது. இங்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக வைச் சேர்ந்த எம்எல்ஏ அருள் தேர்தலில் வெற்றி பெற்றால் 2000 ரூபாய் தருவதாக கூறி அதற்கான டோக்கன்களையும் விநியோகம் செய்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதனை எம்ஏல்ஏ அருள் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை. இன்று டோக்கன்களுடன் வீதிகளில் போரட்டம் நடத்தினர்.

வீடியோ இணைப்பு -

https://www.facebook.com/100001209643110/videos/4307976515919294/



Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி