சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனை நாளை நிறைவு

சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனை நாளை நிறைவு

பைல் படம்.

Handloom Exhibition -சேலத்தில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான கைத்தறி மற்றும் கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது.

Handloom Exhibition -8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைத்தறித் துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கடந்த ஆகஸ்ட் ௭ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான கைத்தறி மற்றும் கண்காட்சி நாளையுடன் நிறைவடைவதாக கைத்தறித்துறை உதவி அமலாக்க அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைத்தறித்துறை உதவி அமலாக்க அலுவலர், துணை இயக்குநர் (கூ.பொ) என்.ஸ்ரீ விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி இரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் முக்கிய இடங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் 07.10.2022 அன்று தொடங்கப்பட்ட மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி (State Level Handloom Expo) மற்றும் விற்பனை 21.10.2022 அன்றுடன் நிறைவடைகிறது.

இக்கண்காட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, வேலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருப்பூர், கரூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், கடலூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் அப்பகுதியில் உள்ள கைதேர்ந்த நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் மென்பட்டு சேலைகள் பெட்சீட்கள், ஜக்கார்டு மற்றும் பிளைன் இரக போர்வைகள் அலங்கார விரிப்புகள் பருத்தி இரக சேலைகள், கோரா சேலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், ஜமக்காளம் ஆகிய கைத்தறி இரக ஜவுளிகள் மேற்படி கைத்தறி விற்பனை கண்காட்சியில் (எக்ஸ்போ ) காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து கைத்தறி இரகங்கள் அரசு வழங்கும் 20% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அரங்குகள் அமைத்து தங்கள் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி இரகங்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் சுமார் ரூ.50.00 இலட்சம் அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கும் 20% அரசுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story