85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் கோபம், கமல்ஹாசன்

85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் கோபம், கமல்ஹாசன்
X

தமிழகத்தில் 60 வயதை கடந்த 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசும் போது, நேர்மைக்கு உயர்ந்த இடத்தை மக்கள் கொடுக்க வேண்டும் என்று மக்கள் உறுதியேற்க வேண்டும்.இதுவரை ஓட்டுப்போடாதவர்களின் விழுக்காடு அதிகம் உள்ளது. இனி கடமை தவறாமல் வாக்களியுங்கள். ஓட்டு அரசியலை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் . தமிழகத்தில் 60 வயதை கடந்தவர்கள் 85 லட்சம் பேர் இருக்கிறார்கள். 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்தோடு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே எட்டு வழிச்சாலையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்கள் நீதி மையம் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கமல்ஹாசனிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!