தண்ணீர் பாட்டில் தாக்குதலில் கவுன்சிலர்கள்

ஆத்தூர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 18 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 13வது வார்டு கவுன்சிலர் கலியவரதராஜ் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் செந்தில் இடையே பிரச்னை எழுந்து ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் பாட்டில் வீசிக்கொண்ட சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த தலைவி கவிதா நேற்று தபாலில் அனுப்பிய உத்தரவில், கடந்த 2024 அக்டோபர் 28ல் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் 3வது வார்டு நடராஜ், 5வது வார்டு வரதராஜன், 13வது வார்டு கலியவரதராஜ், 17வது வார்டு திருச்செல்வன் ஆகியோர் நாகரிகமின்றி பேசி, தலைவியை ஒருமையில் பேசி கூட்டம் நடத்தவிடாமல் இடையூறு செய்ததாகவும், இவர்கள் மீது டவுன் பஞ்சாயத்து கமிஷனர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிப்ரவரி 27ல் நடந்த கூட்டத்தில் கலியவரதராஜ் அநாகரிகமாக பேசி செந்தில் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு, நடராஜ், திருச்செல்வன், வரதராஜன் ஆகியோரும் தீர்மானங்களை வாசிக்கவிடாமல் தரக்குறைவாக பேசி தகராறு செய்ததால், திமுக கவுன்சிலர்கள் நடராஜ், கலியவரதராஜ், வரதராஜன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் திருச்செல்வன் ஆகிய நான்கு பேரும் இரு கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu