‘நான் கிருஷ்ணரை பார்க்கச் செல்கிறேன்’ - கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த வாலிபர்

‘நான் கிருஷ்ணரை பார்க்கச் செல்கிறேன்’ - கடிதம் எழுதி வைத்துவிட்டு  ரயில் முன் பாய்ந்த வாலிபர்
X

Salem News,Salem News Today- அயோத்திப்பட்டணம் அருகே, ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை (மாதிரி படம்)

Salem News,Salem News Today- அயோத்திப்பட்டணம் அருகே, உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

Salem News,Salem News Today- ‘நான் எனது கிருஷ்ணரை பாரக்க செல்கிறேன்’ என, உருக்கமான கடிதம் எழுதி வைத்த வாலிபர், அயோத்தியாப்பட்டணம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் நேற்று காலை ரயிலில் அடிபட்டு வாலிபரின் சடலமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேலம் ரயில்வே போலீசார், காரிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சடலமாக கிடந்தவர் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் கவிபாரதி (வயது 24) என்பதும், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது,

எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டு கொள்கிறேன். எனது குடும்பம் வறுமையிலும், கடன் தொல்லையிலும் சிக்கி மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது. நான் எனது கிருஷ்ணரை பார்க்க செல்கிறேன். பெற்றோர், உறவினர்கள் வேதனைப்பட வேண்டாம். பக்தியால் முக்தி அடைய நினைத்தேன். அதற்கு ரொம்ப நாள் ஆகும் போல் இருக்கிறது. அதனால் தான் இந்த வழியை முடிவு செய்தேன். நான் நாராயணனிடம் போகிறேன். அவரிடம் எல்லாம் உள்ளது. இவ்வாறு கடிதத்தில் அவர் உருக்கமாக கூறியிருந்தார்.மேலும் அந்த கடிதத்தில் 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே' என்ற பாடலும் எழுதப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா