சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் - விவரங்கள் அறிவிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் - விவரங்கள் அறிவிப்பு
X

Salem News,Salem News Today - சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. (கோப்பு படம்)

Salem News,Salem News Today-சேலம் - சூரமங்கலம்: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் விவரங்களை, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Salem News,Salem News Today - ரயில்களில் ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம், முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்- 07389) இன்று (வெள்ளிக்கிழமை) ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மாலை 6.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.44 மணிக்கு நாமக்கல் சென்றடையும். அங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.23 மணிக்கு கரூருக்கும், பின்னர் திருச்சி, புதுக்கோட்டை வழியாக நள்ளிரவு 12.35 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் (வண்டி எண்-07390) காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக மாலை 4.03 மணிக்கு நாமக்கல் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

மேலும், கர்நாடக மாநிலம் அர்சிகெரே ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்-06205) இன்று அர்சிகெரே ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 7.47 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் கண்ணூர்-அர்சிகெரே சிறப்பு ரயில் (வண்டி எண்-06206) நாளை கண்ணூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 4.48 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அர்சிகெரே ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும்.

இந்த தகவலை, சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai tools for education