சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்

சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (மாதிரி படம்)

Salem News,Salem News Today-அம்மாபேட்டையில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

Salem News,Salem News Today- தலைவாசலை அடுத்த தேவியாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், அம்மாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி அம்மாப்பேட்டையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் திடீரென கம்பத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில், மின் ஊழியர் செந்தில்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் நள்ளிரவில் செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 21 பேர் கைது

சேலம் மாநகர பகுதியில் சந்து கடைகளில், டாஸ்மாக் மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிச்சிப்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் விடிய, விடிய மது விற்பனை ஜோராக நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூரமங்கலத்தில் முனியம்மாள் (வயது81), கருப்பூரில் சிவா (46), மாதேஷ் (65), கொண்டலாம்பட்டியில் செல்வராஜ் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டையில் தலா 6 பேர், டவுன் பகுதியில் 5 பேர் என மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி இடையன்காட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் அவர் திடீரென தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால், அவருடைய தாய் விவசாய நிலத்துக்கு அவரை தேடி சென்றார். அங்கு கிணற்றின் அருகே சீனிவாசனின் மோட்டார் பைக் நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சீனிவாசன் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் சீனிவாசன் உடல் மீட்கப்பட்டது. சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

17 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

கிச்சிபாளையம் காளிகவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தீனா (வயது 17). இவர் மேள கலைஞராக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார், தீனா வின் உடலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் என ஏமாற்றிய நபர் கைது

வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி குமாரசாமியூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் பைக்கில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாழப்பாடி அருகே போலீஸ் உடை அணிந்தபடி நின்ற ஒருவர், கந்தசாமியை வழி மறித்தார். மேலும் அவர் போலீஸ் என கூறி மோட்டார் பைக்கின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார். ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்காக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சந்தேகம் அடைந்து போலீஸ் என கூறியவரிடம் விசாரித்தனர். மேலும் அவருடைய மோட்டார் பைக்கில் வனத்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால், அவரை வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்ததில், ஆத்தூர் தாலூகா கடம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (37) என்பதும், ஆத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற நபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும் அவருடைய மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
டிசம்பர் இறுதி... சூரிய பெயர்ச்சி...இந்த 3 ராசிக்கும் ஜாக்பாட்தான்..!