சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்

சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

 Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு. 

Salem News,Salem News Today- பைக்கில் பயணித்த தாய் - மகன் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதில், தாய் உயிரிழந்தார்.

விபத்தில் தாய் பலி; மகன் காயம்

Salem News,Salem News Today- தாரமங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொரவங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் பைக்கில் தாய் செல்வியுடன் (47), தார மங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், ஐயங்காட்டூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் பைக் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த செல்வி தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிகண்டன் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அங்கேரி கொங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கெடியரசன் (வயது 36). இவர் சேலம் கருப்பூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்த போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கழுத்து தலை உள்பட பல பகுதிகளில் படு காயமடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கொடியரசன் நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆன்லைனில், ரூ. 14 லட்சம் மோசடி; சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

ஆத்தூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 29). பட்டதாரி. இவரது செல்போனுக்கு பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பிய தாமோதரன் ஆன்லைனில் 22 முறை, ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 399 முதலீடு செய்தார். அதற்கான கமிஷன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 310 பெற்றார். தாமோதரன் அந்த ஆன்லைன் மூலம் மீதி தொகையை திரும்ப பெற முயன்றார். ஆனால் அவரால் ரூ. 14 லட்சத்தை திரும்ப பெற முடியவில்லை. அப்போதுதான் தாமோதரன் அந்த வெப்சைட் போலி என்பதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தாமோதரன் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

லாரி உரிமையாளர் தற்கொலை

சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி பெரிய காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவஞான பூபதி (வயது 50). இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவர், தனது லாரிக்கு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக தவணை தொகை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள், சிவஞான பூபதியிடம் தவணை தொகை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த சிவஞானபூபதி, விஷ இலையை தின்று மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவஞானபூபதி உயிரிழந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேக்கரி ஊழியர் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் பாபுஷெரீப் (வயது 46). இவர் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் தங்கியிருந்து பேக்கரி ஒன்றில் 7 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டுக்கு உரிமையாளர் வந்தார். பின்னர், அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் மோட்டாரை போடுவதற்காக சென்றார். அப்போது பாபு ஷெரீப் கிணற்றின் மேல் தண்ணீர் இறைப்பதற்காக போடப்பட்டுள்ள இரும்பு கம்பியில், கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பாபு ஷெரீப்பின் உடலை போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story