கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி; சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி; சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
X

Salem News,Salem News Today- கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி (கோப்பு படம்)

Salem News,Salem News Today-கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால், சேலத்தில் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கொண்டாடினர்.

Salem News,Salem News Today- கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பெற்றதை அடுத்து, சேலத்தில் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கினர். இதில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தகப்பிரிவு தலைவர் சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, சானவாஷ் ஷேக் இமாம், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது, ராமன், நாகராஜ், நடராஜ், விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வீரபாண்டி வட்டாரம் சார்பில், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமை வகித்தார். வீரபாண்டி தெற்கு வட்டார தலைவர் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எஸ்.ஆனந்தன், புத்தூர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வீரபாண்டி வடக்கு வட்டார தலைவர் செட்டியார், துணைத்தலைவர் பொன்னுவேல், சுப்பிரமணி, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபால், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருளானந்தம், சமூக ஊடக பிரிவு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்த், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் புனிதா, ஜாஸ்மின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் முத்தரசன், தமிழரசன், சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி அயோத்தியாப்பட்டணம் வட்டார காங்கிரஸ் சார்பில் ரயில்வே கேட் அருகே சட்டசபை தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்திலிங்கம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தெற்கு வட்டார தலைவர் காந்தி, வடக்கு வட்டார தலைவர் சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன் தலைமையில், கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் கணபதி ராம், இளைஞர் காங்கிரஸ் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி, மாநில தொழிலாளர் சங்க செயலாளர் டயானா தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!