சேலம்; வாலிபர் கொலையை கண்டித்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சேலம்; வாலிபர் கொலையை கண்டித்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
X

Salem News,Salem News Today- வாலிபர் கொலையை கண்டித்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. (மாதிரி படம்)

Salem News,Salem News Today-சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Salem News,Salem News Today- தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவர் சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த அதிகாரிப்பட்டியில் மனைவி திவ்யா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும், அவர் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள ஒரு டீக்கடையில், காசாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த சாமுண்டியின் மகனான கூலித்தொழிலாளி மணிகண்டன் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கல்லால் லோகேஸ்வரனை தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தொழிலாளி மணிகண்டனை தேடினர். பின்னர் அவர் நள்ளிரவில் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறுகையில், 'லோகேஸ்வரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. இதனால், மணிகண்டனின் மனைவியுடன் லோகேஸ்வரன் நெருங்கி பழகி உள்ளார். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை அறிந்து அவர்களை மணிகண்டன் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், லோகேஸ்வரனை மணிகண்டன் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்,' என்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதனிடையே, கொலை செய்யப்பட்ட லோகேஸ்வரனின் மனைவி திவ்யா மற்றும் அவரது உறவினர்கள், காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன் மற்றும் ஆனந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, லோகேஸ்வரன் வேலைக்கு சென்று வந்தபோது அவரிடம் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரும், அவருடைய சகோதரர் சாந்தமூர்த்தி, தந்தை சாமுண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி உள்ளனர். இவர்களில் மணிகண்டனை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற 2 பேரையும் கைது செய்ய வேண்டும். அப்போது தான் லோகேஸ்வரனின் உடலை வாங்கி செல்வோம், என்று ஆவேசமாக கூறினர்.

மேலும், கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் பரிதவிக்கும் திவ்யாவுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பொத்தனூரில் நெகிழிப் பை தடை அமலாக்கம் - அதிகாரிகளின் திடீர் சோதனையில் பறிமுதல் நடவடிக்கை