முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை
X

Salem News,Salem News Today- சேலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், நடந்தது. (கோப்பு படம்)

Salem News,Salem News Today-சேலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

Salem News,Salem News Today-முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 54 தொடக்க பள்ளிகளிலும், 2-ம் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 24 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

2023-24-ம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து செயல்படுத்த ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி தேர்வு செய்யப்பட வேண்டிய பள்ளிகள், மாணவ, மாணவிகள் விவரம், சமையலறை கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


(கோப்பு படம்)

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளி வேலை நாட்களில் அரசு பட்டியலிட்டுள்ள சிற்றுண்டிகளில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களாவது, அந்தப் பகுதியில் விளையும் சிறு தானியங்களின் அடிப்படையிலான உணவை வழங்க வேண்டும்.

மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பது, பணிக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு முதல்கட்டமாக 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்குக் கிடைத்து வரும் பலன்களை அடுத்து, இதனை விரிவுபடுத்தி மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இனி, காலை உணவு வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!