கோடை விடுமுறை; சேலத்தில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Salem News,Salem News Today- சேலத்தில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. (கோப்பு படம்)
Salem News,Salem News Today- பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சேலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கும் இன்று, நாளை மற்றும் 1-ம் தேதி மே தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் நகர்புறங்களில் வசிப்பவர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ரயில்களின் வருகை இருப்பதால், பெரும்பாலானோர் பஸ்களில் பயணித்து செல்கின்றனர்.
இதனால் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு 40 சிறப்பு பாஸ்கள் இயக்கபட்டன. இதேபோல கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கினர். கோடை விடுமுறைக்காகவும் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சேலம் வழியாக சிறப்பு ரயில்களை இயக்குவதாக, சேலம் கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளது. இதனால், இம்முறை போக்குவரத்து சிரமங்களின்றி, மக்கள் பயணிக்க வசதியாக தேவையான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu