நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்: வினாத்தாள் மையங்களில் கண்காணிப்பாளர் ஆய்வு..!

நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்: வினாத்தாள் மையங்களில் கண்காணிப்பாளர் ஆய்வு..!
X
நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்: வினாத்தாள் மையங்களில் கண்காணிப்பாளர் ஆய்வு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு 2024-2025ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் முதல்வாரத்தில் தொடங்குகிறது.

10ம் வகுப்பு மார்ச் 28 ஏப்ரல் 15

இதற்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னதாக, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 செய்முறை தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 22ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பிற்கான அறிவியல் செய்முறை தேர்வு, நாளையுடன் நிறைவடைகிறது.

தேர்வுக்கான ஏற்பாடுகள்

முதற்கட்டமாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பொதுத்தேர்வு பணியினை கண்காணித்து மேற்பார்வையிட, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தேர்வு மையங்கள்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 151 இடங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவின் பேரில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள்

சேலம், ஆத்தூர், இடைப்பாடி, மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்திற்கென பொதுத்தேர்வு கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் செயலாளர் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து அனைத்து வினத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். வினாத்தாள்கள் உள்ள அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

தேர்வு பணிகள் எந்தவொரு தங்குதடையின்றி நடைபெற வேண்டும். பொதுத்தேர்வும் எந்த இடையூறு மற்றும் புகார்களுக்கு இடம் அளிக்காமல் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு பணிக்காக உரிய எண்ணிக்கையில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர், நிலையான படையினர், வழித்தட அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Tags

Next Story
கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!