மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு..!

X
By - charumathir |27 Feb 2025 3:00 PM IST
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த 20ல் அணைக்கு வினாடிக்கு 167 கனஅடியாக இருந்த நீர்வரத்து 21ல் 641 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து 22ல் 491; 24ல் 329 கன அடியாக சரிந்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 284 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று திடீரென 829 கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் தமிழக, கர்நாடக மாநில எல்லை பகுதியில் பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 109.80 அடி நீர் இருப்பு 78.12 டி.எம்.சி.,யாக இருந்தது. குடிநீருக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu