காஸ் சிலிண்டர் பிரச்னை 28ல் குறைதீர் கூட்டம்..!

காஸ் சிலிண்டர் பிரச்னை 28ல் குறைதீர் கூட்டம்..!
X
காஸ் சிலிண்டர் பிரச்னை 28ல் குறைதீர் கூட்டம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சேலம் மாவட்ட டி.ஆர்.ஒ., ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடு, புகார்கள் தொடர்பான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் 28 பிற்பகல் 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் அறை எண்-115ல் நடக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, குறைதீர் கூட்டத்தில் எரிவாயு வாடிக்கையாளர்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
ai personal assistant future