சேலம், நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி: ஆட்சியர் துவக்கம்

சேலம், நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி: ஆட்சியர் துவக்கம்
X

நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.

Salem News Today: சேலம், நிலவாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

Salem News Today: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் இன்று (21.05.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.சிவகுமார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சி. மாறன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி. இராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!