சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு ஏற்பாடு:அதிகாரி தகவல்
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படுகிறது (கோப்பு படம்)
sugavaneswara temple inside cellphone ban
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் மொபைல் போனை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி, கோட்டை மாரியம்மன் கோயில் , கோட்டை பெருமாள்கோயில், மற்றும் நகரின் நடுமையத்தில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. சுகவனேஸ்வரர் கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்துசெல்கின்றனர்.
தற்போதைய நாகரிக காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. எந்தவொரு விஷயமானாலும் உடனே அதில் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுப்பது வழக்கமாகிவிட்டது. விபத்து என்றால் கூட அடிபட்டவர்களை காப்பாற்றாமல் படம் எடுத்து போஸ்ட் செய்யும் கலாச்சாரம் அண்மைக்காலமாக பெருகி வருகிறது. இதேபோல் கோயிலுக்கு சென்றாலும் ஒருசில பக்தர்கள் அனைத்தையும் போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கும் விதத்தில் திருப்பதி, காளஹஸ்தி போல் தமிழகத்திலும் பிரதான கோயில்களுக்கு வரும் பக்தர்கள் செல்போனை உள்ளே எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டு அதற்காக டோக்கன் வழங்கும் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
sugavaneswara temple inside cellphone ban
அந்த வகையில் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதோடு அதனை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திருச்செந்துார், பழனி கோயில்களில் தரிசிக்க செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல கோர்ட் உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 1 ந்தேதி முதல் பழனி கோயிலில் இந்த நடைமுறையானது அமல்படுத்தப்படுகிறது.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைகோயில்களில் இம்முறையானது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அந்த வகையில் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் இது தொடர்பாக மண்டல இணை கமிஷனர் உதவி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
sugavaneswara temple inside cellphone ban
கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை கோயிலுக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. மீறி கொண்டு சென்றது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் . மொபைல் போன் திருப்பி வழங்கப்படமாட்டாது என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கோவில் நுழைவு வாயில்களில் பக்தர்கள் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் பக்தர்களின் செல்போனைப் பெற்று பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை ஈடுபடுத்தவேண்டும். செல்போனைப் பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கும் முறையினை அமல்படுத்த வேண்டும். இதனைப் பாதுகாக்க ஒரு செல்போனுக்கு ரூ. 5 சீரான கட்டணத்தினை வசூலிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் போன் பாதுகாப்புக்குரிய இடத்தினை ஒதுக்கி இதனை நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu