சுவையோ..சுவை..மணமோ..மணம்:சேலம் பெருமைக்கு தட்டுவடை செட்..!

salem thattu vadai-சேலம் தட்டுவடை(மாதிரி படம்)
salem thattu vadai-சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். தித்திக்கும் மாம்பழம்.. சுவையான மாம்பழம் விதவிதமான வகைகள் சேலம் மாநகருக்கு சீசனில் வரத்துவங்கும். கடந்த கொரோனா பரவல் காலத்தில் கடைகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மாம்பழ விற்பனை துவங்கி இன்றைய காலம் வரை கொடிகட்டி பறக்கிறது.சரிங்க.. சேலத்துக்கு மாம்பழம் மட்டுந்தான் பெருமையா? வேறு ஏதும் இல்லையா? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
சேலம் மாநகரிலுள்ள தள்ளு வண்டி வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தட்டுவடை செட் பன் செட் வகைகள் இன்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் , கடை மற்றும் ஆபீசில் வேலை பார்ப்பவர்களின் மாலை நேர தற்காலிக பசியினையாற்றும் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செட் ஆக உருவாகியுள்ளது.விலை எவ்வளவுநடுத்தர குடும்பத்தினரும் நம்பகத் தன்மையோடு நாடி செல்லும் கடைகளாக தட்டுவடை செட் விற்கும் தள்ளுவண்டிகள் இன்றும் திகழ்ந்து வருவது சேலம் மாவட்டத்துக்கு பெருமைதான்.௪ தட்டுவடை செட் ஒரு சில கடைகளில் ரூ20க்கும் , ஒரு சில கடைகளில் ரூ.12 க்கும் -௫ தட்டுவடை செட் ரூ.15க்கும் கடையை பொறுத்து சுவையை பொறுத்து விற்பனை செய்கின்றனர்.
salem thattu vadai-காரப் பொரி:சுவை நறுமணத்தோடு காரப் பொரியும் பலவிதமான கார சட்னி வகைகளில் கிடைக்கும். இதில் பூண்டு பொரியினை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். உடலின் வாயு பிரச்னைகள் வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை போக்கும் தன்மை கொண்ட பூண்டினால் செய்யப்பட்ட சட்னியோடு கலந்து தரும் பொரி சுவை மிகுந்தது. தேவையான உப்பு , பீட்ரூட் வெங்காயம் கொத்தமல்லி ஆகியவைகளை கலந்து சுவைமிகுந்த பொரியினை வாடிக்கையாளர்களுக்கு தருவதால் கார பொரிக்கு ஏக மவுசுதான் போங்க.
முறுக்கு நொறுக்கல்: கை முறுக்கினை நன்கு நொறுக்கி அதோடு வாடிக்கையாளர் விரும்பும் சட்னி வகைகளோடு தக்காளி பீட்ரூட் வெங்காய துருவல்களை கலந்து சற்று எலுமிச்சை சாறோடு தரப்படும் சுவைமிகுந்த ஸ்நாக்ஸ்தான் நொறுக்கல்.பன்-செட்:நம் கடைகளில் விற்கப்படும் பன்-னை இரண்டாக சரிபாதியாக வெட்டி அதன் நடுவில் வெண்ணை வெங்காயம் தக்காளி பீஸ் காரம் ஆகியவற்றை வைத்து தோசைக் கல்லில் வேகவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்நாக்ஸ்தான் பன் செட். இதன் விலை ரூ.25 ஆகும்.
சுண்டல் :இது போன்ற கடைகளில் சாஸுடன் விற்கப்படும் சுண்டலுக்கு ஏகோபித்த வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் உள்ளது. இதனோடு சிறு காராபூந்தி மிக்சர் ஆனியன் துகள் கலந்து ரூ.25க்கு விற்கப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவாகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்தான் மசால் சுண்டல்.முன்பெல்லாம் மாலை நேரத்தில் மட்டுமே சைக்கிள் தள்ளுவண்டிகளில் விற்கப்பட்ட தட்டுவடை செட் தற்போது வழக்கம்போல் காலை முதல் திறக்கப்படும் கடைகளுக்கு தடம் மாறியுள்ளது சேலம்.
salem thattu vadai-மாநகர மக்களின் பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.இது மட்டும் அல்லாமல் கல்யாணம் வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிகளிலும் இந்த தட்டுவடை செட் மெனுவில் இடம் பெற்று வருவதுதான் ஹைலைட்டான விஷயமே.தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தட்டுவடை செட் கடைகள் முளைத்து வந்தாலும், இதன் ஆரம்பம் சேலத்திலிருந்து துவங்கியது தான். சேலம் மாவட்ட மக்களின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வாங்க...நாமும்... தட்டுவடை செட் சாப்பிட போகலாம்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu