சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.35.5 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு

சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.35.5 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு
X

Salem News,Salem News Today-சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.35.5 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Salem News,Salem News Today-சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.35.5 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem News,Salem News Today - சேலத்தில் ஜவுளி வாங்கி ரூ.35½ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47). இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். மொத்தமாக ஜவுளிகள் விற்பனை செய்து வருகிறேன் என்னிடம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த அருண், அவருடைய மனைவி சுதா ஆகிய 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கடனாக ரூ.36 லட்சத்து 27 ஆயிரத்து 672-க்கு துணிகள் வாங்கினர். அப்போது விரைவில் மொத்த பணம் தருவதாக கூறினர். இதை நம்பி அவர்களிடம் ஜவுளி துணிகளை கொடுத்தேன். அவர்கள் ரூ.98 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். மீதி ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 672-ஐ உரிய நேரத்தில் அவர்கள் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பல முறை கேட்டும் அவர்கள் பணம் கொடுக்க மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் கணவன்- மனைவி 2 பேரும் பணம் மோசடி செய்தது உண்மைதான் எனத் தெரிய வந்தது. அதன்பேரில் அருண், சுதா ஆகிய 2 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது