சேலம் 33 வது வார்டு பகுதியில் வீணாகும் குடிநீர் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம் 33 வது வார்டு பகுதியில் வீணாகும் குடிநீர்   பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

33 வது வார்டு பகுதியில் வீணாகும் தண்ணீரால் ரோடுகளில் பலர் வழுக்கி விழும் நிலையே தொடர்கிறது.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Water Leakage Repair - சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைந்து பல நாட்களாகியும் சரி செய்யாததால் பொதுமக்கள் கடும் சிரமமைடந்து வருகின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா?


Water Leakage Repair -

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பகுதியில் குடிநீர் லைன் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் வரும்போது வீணாகும் தண்ணீர் அனைத்தும் ரோடுகளில் ஆறுபோல்ஓடுவதால் வாகனஓட்டிகள், தெருவில் குடியிருப்போர் என பலரும் பாதிப்படைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இக்குழாயின் உடைப்பை சரி செய்ய வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

salem corpn 33 ward area leakage of drinking water


சேலம் 33 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர் பைப் உடைந்து வீணாக ரோட்டில் செல்லும் குடிநீர்

salem corpn 33 ward area leakage of drinking water

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60வார்டுகள் உள்ளது. அந்தந்த வார்டுகளுக்கென குடிதண்ணீர் திறந்துவிட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது குடிநீரின் இருப்பைப் பொறுத்து அவ்வப்போது வார்டு பகுதியில் குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாநகராட்சி 33 வது வார்டுக்குட்பட்ட பகுதியான காசி விஸ்வநாதர் கோயில் எதிர் தெரு பகுதியில் மூன்று ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இரண்டு ஸ்கேன் சென்டர்கள், குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மற்றும் ஒரு தனியார் ஆஸ்பத்திரி, ஒரு திருமண மண்டபம் என உள்ளதால் இந்த ரோடானது எப்போதும் போக்குவரத்து பரபரப்பான பகுதி ஆகும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரோடு முழுவதும் மில்லிங் செய்யப்பட்டு புதிய ரோடு போடுவதற்கான பணிகள் நடந்து வந்தன. அதற்கு முன்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் புதிய தண்ணீர் கனெக்‌ஷன் கொடுப்பதற்கான குழாய் பதிக்கும் பணி நடந்து அது முடிந்தது. அதற்குப் பிறகு ரோடானது முழுவதுமாக மில்லிங் செய்யப்பட்டது.

பல நாட்கள் குண்டும் குழியுமாகவே காணப்பட்ட ரோட்டினை சீரமைக்க இப்பகுதிபொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்ததன் விளைவாக பேவர் பிளாக் ரோடு போடப்பட்டது. இப்பகுதியில் ரேஷன் கடைகள் 3 இயங்கி வருவதால் தார்ரோடு போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் டெண்டர் விடப்பட்டதால் பேவர் பிளாக் ரோடுபுதியதாக போடப்பட்டது.

இந்த ரோடு போடுவதற்கு முன்பிருந்தே இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்த பின்னர் புதிய பேவர் பிளாக் ரோடு போடவேண்டும் என ஒப்பந்ததாரரிடம் சொல்லப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி வாட்டர்மேனும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தும் அவர்கள் அதனை சரி செய்யாமல் பேவர் பிளாக் கற்கள் பதித்து ரோட்டினை முடித்துவிட்டனர்.

salem corpn 33 ward area leakage of drinking water


33 வது வார்டு பகுதியில் புதியதாக போடப்பட்ட பேவர் பிளாக் ரோட்டில் வீணாகும் குடிநீர்

salem corpn 33 ward area leakage of drinking water

குடிதண்ணீர் வீணாகும் அவலம்

தற்போது அந்த உடைப்பு சரிசெய்யப்படாத நிலையில் குடிதண்ணீர் இப்பகுதிக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதனால் புதியதாக போடப்பட்ட பேவர்பிளாக் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்துவிடப்படும் நேரம் முதல் தண்ணீர் நிறுத்தப்படும் நேரம் வரை இப்பகுதியில் உள்ள குழாய் உடைப்பினால் தண்ணீர் வெளியேறி வருவதைக்கண்டு மனம் பதைக்கிறது. எத்தனையோ பகுதிகளில் இந்த சேலம் மாநகரத்தில் குடிதண்ணீர் வரவில்லை என கோரிக்கை விடுக்கும் நிலையில் கண்ணுக்கு எதிராக பல நாட்களாக எவ்வளவு லிட்டர் தண்ணீர்வீணாகிக் கொண்டிருக்கிறது.

வருணபகவானின் கருணையால் இந்த ஆண்டு மழை வெளுத்து வாங்குகிறது. தண்ணீர் பிரச்னையானது தலை துாக்கவில்லை சரிதான். ஆனால் கடந்த பல வருஷங்களுக்கு முன்பு இதே சேலம் மாநகரில் உள்ளோர் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பிடித்தோமே? என பொதுமக்கள் கூறுகின்றனர். அந்தநிலைமையில் எவ்வளவு தவித்தோம். ஆனால் இன்றோ தண்ணீர் வந்தும் அது மற்றவர்களுக்கு பிரயோஜனப்படாமல் வீணாக சென்று கொண்டிருப்பதைப்பார்க்கும்போது வேதனை அதிகமாகிறது என தெரிவிக்கின்றனர்.

சரிசெய்ய கோரிக்கை

குடிநீர் சப்ளை செய்யப்படும் நேரத்தில் சப்ளை செய்யும் நேரம் முழுக்க இப்பகுதியில் வீணாகும் தண்ணீர் ரோட்டில் ஆறுபோல் வழிந்தோடி செல்வதைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது. ரோட்டில் உள்ள தண்ணீரில் பல வாகன ஓட்டிகள் வேகமாக வரும்போது வழுக்கி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ அல்லது கார்ப்பரேஷன் அதிகாரிகளோ யாரோ ஒருவர் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!