சேலம் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதி...

சேலம் லோக்சபா தொகுதியின்  திமுக வேட்பாளர் செல்வகணபதி...
X

முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி  (கோப்பு படம்)

salem constituency Dmk Candidate சேலம் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

salem constituency Dmk Candidate

இந்தியாவின் 18 வது லோக்சபா தேர்தலானது அடுத்த மாதம் 19 ந்தேதியன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகின்றன.

சேலம் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 1991 ம் ஆண்டு திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்ஏவானார். பின்னர் ஜெ ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருடைய வயது 65. இவர் திருச்செங்கோட்டில் பிறந்து கேம்பஸ் லா சென்டரில் படித்து பட்டம் பெற்றவர். 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு 13 வது லோக்சபாவுக்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் அதிமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அதிமுகவிலிருந்து விலகி கடந்த 2008 ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 2000 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ந்தேதி அவர் ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து கடந்த 2001 டிசம்பர் 4 ந்தேதியன்று விடுவிக்கப்பட்டார்.

salem constituency Dmk Candidate


தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தற்போதைய வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி (கோப்பு படம்)

பின்னர் 2010 ம் ஆண்டு ஜூன் 20 ந்தேதி அவர் ராஜ்யசபா எம்.பியானார். 2014 ம் ஆண்டு நிதி மோசடிக்காக கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை திமுக தலைமை அவர் என்ன சொல்கிறாரோ அவரே வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆதரவு அதிகம் பெற்றவர் வீரபாண்டியார் அசைக்க முடியாத சக்தியாக கட்சியில் வலம் வந்த அவர் திடீரென உடல் நலமின்றி இறந்தார். அவர் இருந்த காலத்திலேயே திமுகவில் உட்கட்சிப்பூசல் இருந்துகொண்டுதான் இருந்தது. இருந்த போதிலும் வீரபாண்டியார் இருந்த போதே அவருடைய மூத்த மகன் செழியன் காலமானார். இதனால் அவருடைய இளையமகன் ராஜாவுக்கு சீட் வழங்கப்பட்டு எம்எல்ஏவும் ஆனார். வீரபாண்டியார் மறைவுக்கு பிறகு கோஷ்டிபூசல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

என்ன? கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற வக்கீல் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற வருத்தம் அவரது ஆதரவாளர்களிடம் இன்று வரைதொடர்கிறது. சேலம் மாவட்ட பொறுப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இருந்து வருகிறார்.எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரது தலைமையில் நடந்து வருகிறது. வீரபாண்டியாருக்கு பிறகு சேலம் திமுகவின் வலிமை குறைந்து போனதோ என எண்ணும் வகையில் இங்கிருப்பவர்களை விட்டுவிட்டு மாற்று மாவட்ட அமைச்சரை பொறுப்பாளராக நியமித்திருப்பது கட்சியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும் வீரபாண்டியாரின் இளைய மகன் ராஜாவும் சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பிறந்த நாளிலேயே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தற்போது அந்த குடும்பத்தில் வீரபாண்டியாரின் வாரிசு என டாக்டர்.பிரபு மட்டுமே இருந்து வருகிறார்.அவருக்கு சீட் வழங்கப்படும் என எண்ணியிருந்த வேளையில் தற்போது முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாள் வரை எம்.பியாக இருந்த பார்த்தீபனும் மீண்டும் முயற்சித்தார் அவருக்கும் வழங்கப்படவில்லை.

ஆக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் செல்வகணபதி கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்வார்...அனைவரிடமும் அன்புடன் பழககூடியவர். அனுபவம் வாய்ந்தவர்.. பிரதமர் மோடி பிரசாரம் செய்ததால் நல்ல அனுபவம் வாய்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என திமுக கட்சித்தலைமை எண்ணியதோடு மட்டும் அல்லாமல் மிகப்பொறுமையாகவே அறிவித்துள்ளனர்.

ஆக சேலத்தினைப் பொறுத்தவரை அறிவிக்கப்பட்டுள்ள விக்னேஷ் களத்திற்கு புதியவர். பாஜ கூட்டணி வேட்பாளராக பாமகவிலிருந்து யார் நிற்கப்போகிறார் என்பது தெரியாத நிலையில் அதிமுக, திமுக மட்டுமே தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜவும் அறிவித்துவிட்டால் களமானது மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story