/* */

சேலம் மாநகரில் சாரல் மழை கூல்கிளைமேட்:பொதுமக்கள் மகிழ்ச்சி.

salem city cool climate,people happy சேலம் மாநகரைப் பொறுத்தவரை ஏற்காடு தட்பவெப்ப நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

சேலம் மாநகரில் சாரல் மழை    கூல்கிளைமேட்:பொதுமக்கள் மகிழ்ச்சி.
X

சேலத்தில் நேற்று  காலை முதலே சாரல் மழை பெய்ததால் கூல்கிளைமேட் நிலவியது (கோப்பு படம்)

salem city cool climate,people happy

சேலத்தில் பெய்த சாரல் மழையினால் கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களுக்குமழை உண்டு என வானிலை ஆய்வு மையமும் தெரிவி்த்துள்ளது. கடந்த 4ந்தேதியன்றுதான் அக்னிநட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் ஆரம்பித்துள்ளது. இதில் முதல் 7 நாட்கள் மிதமான வெயிலும் இடையிலுள்ள 7 நாட்கள் மிக கடுமையான வெயிலும், கடைசி 7 நாட்கள் மிதமான வெயிலும் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மொத்தம் 21 நாட்கள் அக்னி நட்சத்திரம் இருக்கும்.

salem city cool climate,people happy


salem city cool climate,people happy

சேலம் மாநகரினைப்பொறுத்தவரை பகலில்வெயில் வெளுத்து வாங்கும். கடந்த பிப்ரவரி மாதம் முதலே இந்த நிலைதான். அருகிலுள்ள ஏழையின் ஊட்டியான ஏற்காடு இருப்பதால் அங்கு மழை பெய்யும் பட்சத்தில் சேலம் மாநகரின் சீதோஷ்ணமும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவும். அந்த வகையில் இன்று காலை முதலே வெயில் தலைகாட்டாததால் கூல்கிளைமேட் நிலவியது. வானம் மப்பும் மந்தாரமாக இருந்ததோடு அவ்வப்போது சாரல் மழையும் ஒரு சில நேரத்தில் சற்று கனமழையும் விட்டு விட்டு பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

சாதாரணமாக எந்தவித காற்று இல்லாமலும் துாற ஆரம்பித்த சாரல் மழை நிதானமாக பெய்தது. இந்த தொடர் சாரல் மழையால் பிளாட்பாரத்தில் கடை விரிக்கும் கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவ்வப்போது சற்று கனமழையாக பெய்ததால்சேலம் மாநகரிலுள்ள சாக்கடைகள் அனைத்தும் சுயமாக சுத்தம் செய்துகொண்டன என்று கூட சொல்லலாம். ரோடுகளில் உள்ள பள்ளம் மேடுகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் நடமாடக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

salem city cool climate,people happy


salem city cool climate,people happy

எந்தவித காற்றும்இல்லாமல் நிதானமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருந்தபோதிலும் விடாமல் பெய்த சாரல் மழைகாரணமாக ரோடுகளில் மாலை நேரத்தில் கடைவிரிப்போர் மற்றும் தட்டுவடை செட், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் சற்று நேரம் பாதிப்படைந்தது .எது எப்படியோ, பகலில் கடும் வெயிலை தினமும் சந்தித்து வரும் சேலம் மாநகர மக்களுக்கு ஒரு நாள் முழுவதும் வெயில் இல்லாமல் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்று கூட சொல்லலாம்.

salem city cool climate,people happy


salem city cool climate,people happy

என்னதான் சாரல் மழை தொடர்ந்து பெய்தாலும் இது ஒரு விதத்தில் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச்செய்துள்ளது. வெளியில் செல்லும் வேலை இருப்போர் வீட்டை விட்டு வரமுடியவில்லை. காரணம் டூவீலர் இல்லாமல் இப்போதெல்லாம் நடந்து செல்வதைப் பார்க்க வே முடியாது. மழை வந்தாலும் அவர்கள் நடக்க தயாராக இல்லை.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிப்படைந்தது. சுடச்சுட பலகாரம் விற்கும் கடைகள், டீக்கடைகளுக்கு பெரும் வியாபாரம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள பல ஐஸ்கிரீம் கடைகளுக்கு இன்று வியாபாரம் சற்று மந்தமாகவே இருந்தது.

Updated On: 8 May 2023 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு