சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டினை விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ரோடு முழுவதும் கருங்கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகனங்களே செல்ல இயலாதநிலையே தொடர்கிறது.
public request new road for town station area
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதி ரோட்டினை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனில் பாசஞ்சர் ரயில்கள் இரண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் வழக்கமாக தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு பாசஞ்சர் ரயில்களிலும் சேலம் மாநகரில் வேலை பார்ப்பவர்கள் , கல்லுாரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் என பலதரப்பினரும் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
public request new road for town station area
ரோட்டின் நடுவே குழி எடுத்ததால் எந்த வாகனமும் செல்லவே முடியவில்லை கருங்கற்களில் சறுக்கி விபத்து ஏற்படுகிறது
public request new road for town station area
இந்த ரோடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்தும் ஆனந்தா பாலம் முதல் முள்ளுவாடி கேட் வரை ரோடு குண்டும், குழியுமாகவே பயணிப்பதற்கு லாயக்கற்ற ரோடாக காட்சியளித்து வருகிறது. இருந்த போதிலும் பல வேலைகளுக்கு செல்வோர் இந்த ரோட்டில்தான்தினமும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயிலில் பயணம் செய்ய ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் உரிய நேரத்தில் வந்த சேர முடியாத நிலையே தொடர்ந்து வருகிறது.
பணிகள் முடிவடைந்தும் ஏன் புதிய ரோட்டினை அமைக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த ரோடு படு பிசியாக இருந்த நிலையில் தற்போது குண்டும், குழியுமான ரோடுகளில் பலர் சுற்றிக்கொண்டு செல்லும் நிலையே தொடர்கிறது. டிஎம்எஸ் வழியாக அணைமேடு கேட் வழியாகவே பல வாகனங்கள் தன் பயணத்தினை மேற்கொள்கின்றனர். இதனால் நேர விரயம் மற்றும் பெட்ரோல் , டீசலுக்கு உபரி செலவினங்களாகிறது.
public request new road for town station area
public request new road for town station area
ரயில் பயணிகள் பாதிப்பு
சாதாரண நாட்களிலேயே இந்த நிலைமை என்றால் மழைக்காலத்தில் சொல்லவே தேவையில்லீங்க. குண்டும்.குழியில் தேங்கும் மழை நீரால் கொஞ்சம் நஞ்சம் சென்றுவந்த வாகனங்கள் முழுவதுமாக செல்லஇயலாத நிலை யாகிவிடுகிறது. காரணம் மண் ரோடு என்பதால் சேறும் சகதியாகி நடப்பதற்கே லாயக்கற்ற ரோடாகி விடுவதால் ரயிலில் பயணம் செய்து சேலம் வரும் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை தேவை
சேலம் மாநகரின் மையப்பகுதியான பிசியான ரோடான டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சேலம் மாநகர பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu