பராமரிப்பு பணி காரணமாக சேலம்- பெங்களூரு ரயில் சேவையில் பகுதி ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சேலம்- பெங்களூரு ரயில் சேவையில் பகுதி ரத்து
X
பராமரிப்பு பணி காரணமாக சேலம்- பெங்களூரு ரயில் சேவையில் பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சேவைகளுக்கான முனைய வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து

ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்ஷன்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28, 29 & 30 மே, 2023 சேலம் ஜங்ஷன் – கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். இது சேலம் ஜங்ஷனில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை இயக்கப்படாது.

ரயில் எண்.12677 KSR பெங்களூரு – எர்ணாகுளம் ஜங்ஷன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 29, 30 & 31 மே, 2023, KSR பெங்களூரு – சேலம் ஜங்ஷன் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷனுக்கு ரயில் இயக்கப்படாது; இது சேலத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் வரை செல்லும்.

ரயில் எண்.22666 கோயம்புத்தூர் ஜங்ஷன்– KSR பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் 31.05.2023 கிருஷ்ணராஜபுரம் – KSR பெங்களூரு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு SMVT பெங்களூரு ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்படும்.

ரயில் எண்.22665 KSR பெங்களூரு – கோயம்புத்தூர் ஜங்ஷன் UDAY எக்ஸ்பிரஸ் 31.05.2023 KSR பெங்களூரு – கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இது SMVT பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும்..

தடம் வழி மாற்றம்

ரயில் எண்.11014 கோயம்புத்தூர் லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் 31.05.2023, கோயம்புத்தூர் ஜங்ஷனிலிருந்து 08.50 மணிக்குப் புறப்படும். சேலம் ஜங்ஷன்- யெலஹங்கா ஜங்ஷன் ரயில் நிலையங்களுக்கு இடையே திருப்பத்தூர், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் விளைவாக, இந்த ரயில் தருமபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையங்களில் நிறுத்தத்தை தவிர்க்கும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story