New Year Celebration Time Deadline சேலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கே முடிக்க போலீஸ் உத்தரவு
New Year Celebration Time Deadline
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு, அன்னதானப்பட்டி சமுதாயக்கூடத்தில் நட்சத்திர ஓட்டல்கள் கேளிக்கை விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடந்தது.
மாநகர போலீஸ் சார்பில் பிறப்பிக்கப்பட்டஉத்தரவானது,
ஆங்கில புத்தாண்டுநிகழ்ச்சிக்கு சிறப்பு உரிமம் பெற்றுள்ள நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை கண்டிப்பாக முடிக்க வேண்டும். வளாகத்துக்கு வரும் வாகன விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தினைத் தவிர இதர இடங்களில் மது வகைகளை பரிமாறக்கூடாது.
தற்காலிக மேடையின் உறுதித்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய சான்றிதழ் பெறுவதோடு நீச்சல் குளத்தின் மீதும் அதன் அருகிலும் தற்காலிக மேடை அமைக்கக்கூடாது. குறிப்பாக டிச.31 மாலை 6மணி முதல் ஜனவரி 1 காலை 6மணி வரை நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லாததை உறுதிசெய்து அதன் அருகே யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்க வேண்டும்.
மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்ட முயற்சிப்பவரை தடுத்து அவர்களை மாற்று வாகனத்தில் வீட்டுக்கு அனுப்ப ஓட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில் ரகளை செய்பவர்களை கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளை நாகரிகம் கண்ணியம் ஆபாசமின்றி நடத்த வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டவரின் விபரங்களை போலீசுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை,, நிர்வாகம் முன்கூட்டியே செய்ய வேண்டும். விதிமீறும் நட்சத்திர ஓட்டல் கேளிக்கை விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராக்கள் பொருத்தம்
சேலத்தில் சீலநாய்க்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குச்சாவடி, 4,5 ரோடுகள், அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, சுந்தர் லாட்ஜ், ஏற்காடு சாலை, தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் வாகனங்களை அதிவேகமாகவும், போதையில் ஓட்டுதல் உள்ளிட்ட சாலை விதிகளைமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே பைக்கில் 3 பேர் செல்லக்கூடாது.
உதவி கமிஷனர்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபடுவர். வழிபாட்டு தலங்கள், பஸ்ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் உதவி துணை கமிஷனர்கள் 150 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஈடுபடுகின்றனர். தவிர 20 போலீஸ் ரோந்து வாகனம், சேலத்தில 24 மணி நேரமும் வலம் வரும். சாலை விதிகளை மீறுவோர்,குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து பிடிக்க முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுளள்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu