சேலம் மின்பகிர்மான வட்ட நகர கோட்டம் சார்பில் மின்சிக்கன வார விழா
மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை சேலம் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.நகர கோட்ட செயற்பொறியாளர்,உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மின்சார சிக்கன வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மின்சிக்கன வார விழா நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேலம் மின்சார பகிர்மான வட்டம், நகர் கோட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. சேலம் வள்ளுவர் சிலை முன்பு தொடங்கிய பேரணி அப்சரா இறக்கம் வரை நடைபெற்றது.
பேரணியினை சேலம் மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், நகரக் கோட்டத்தின் செயற்பொறியாளர் சுந்தரி மற்றும் நகரக் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது, பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், பேரணியில் பங்கேற்றோர் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu