அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
X

Salem News Today: அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Salem News Today: அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Salem News Today: அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு அரசு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பேரிடர் மேலண்மை துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட, போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

பொதுமக்கள் கோடைகாலங்களில் முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை உடுத்தி, காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள மதிய வேலையில் வெளியே செல்லும் போது கண்ணாடி அணிந்து, குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

அதேபோல் குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக் கூடாது. பருகுவதற்கு இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும், வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். போதிய இடைவெளிகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு குடிக்க போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டாமல், காற்றோட்டமான இடங்களில் கட்டி வைக்கலாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து, போதுமான குடிநீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil