சேலத்தில் சாலை பணியாளர்களின் போராட்டம்

சேலத்தில் சாலை பணியாளர்களின் போராட்டம்
X
41 மாத பணி நீக்க காலம் தொடர்பாக சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!"

சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச்சாவடிகள் அமைத்து தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசாணை நகலை எரித்து போராட முயன்றனர். இந்த முயற்சியை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் அமராவதி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும், சேலம், இடைப்பாடி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த சாலைப் பணியாளர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் மூலம் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

Tags

Next Story