சாலை விபத்து- திருச்சி மாவட்ட கலெக்டர் உயிர் தப்பினார்

சாலை விபத்து- திருச்சி மாவட்ட கலெக்டர் உயிர் தப்பினார்
X

விபத்தில் உயிர் தப்பிய கலெக்டர் சிவராசு

சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் ஆக இருப்பவர் எஸ். சிவராசு. இவர் சேலத்தில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள சேலம் வந்திருந்தார். திருமண மாப்பிள்ளை சிபி ஆதித்யா செந்தில் குமார் 2 வருடங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சப் கலெக்டர் ஆக பாமியாற்றினார். அவரது திருமண விழாவில் திருச்சி கலெக்டர் பங்கேற்று விட்டு ,காரில் திருச்சிக்கு திரும்பினார். சேலம் - திருச்சி மெயின் ரோட்டில் மல்லூர் அருகே வந்த போது அவரது கார் மீது எதிரே வந்த ஒரு லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.

இதில் கலெக்டரின் கார் டிரைவரும், லாரியின் டிரைவரும் காயம் அடைந்தனர். கலெக்டர் சிவராசு காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கலெக்டர் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags

Next Story