சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் உத்தரவை மீறியதற்கான விளக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் உத்தரவை மீறியதற்கான விளக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
X
சேலம் பெரியார் பல்கலை, 2017 நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் உயர் நீதிமன்றத்தில் விவாதம்

Salem district news today, Salem news today live, Salem news, Salem news in tamil, Latest Salem newsஅவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கடிதம்: சேலம் பல்கலை பதிவாளர் ஆஜராக நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் "நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெற்றால் தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும்" என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணிபுரிந்த குழந்தைவேல் உள்ளிட்ட பலர் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி 2013-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பணி மூப்பு அடிப்படையில் மனுதாரர்களுக்கு உரிய பதவி உயர்வு மற்றும் அதற்கான பணப்பலன்களை வழங்க 2017-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், குழந்தைவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் தான், பதவி உயர்வுக்கான பரிந்துரை பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும்" எனப் பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டனர். எனவே, எந்த நிர்பந்தமும் செய்யாமல் தங்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வரும் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகி கடிதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

Tags

Next Story