முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு: கே.என். நேரு

முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு: கே.என். நேரு
X

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தலைமையில் இன்று (03.04.2023) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களின் மீது அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தலைமையில் இன்று (03.04.2023) நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக துறை சார்ந்த கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

முதல்வரின் முகவரித் துறையின் வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அவற்றில் தெரிவிக்கப்படும் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவற்றினை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் முகவரித்துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து அம்மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களின் மீது அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, இத்திட்டத்தில் சேலம் மாவட்ட அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகண்டு, சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவ, மாணவியர் விடுதிகள் எனத் தேர்வு செய்யப்பட்ட விடுதிகளின் காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.சிவகுமார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வன அலுவலர் காஷ்யப் க்ஷஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, துணை மேயர் மா.சாரதாதேவி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு