மாரியம்மன் கோவில் புனரமைப்புக்கு பொது நபரை நியமிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் ஒரு மனு அளித்துள்ளனர், அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தங்கள் மூதாதையர்கள் காலம் தொட்டு அக்கிராமத்தில் மாரியம்மன், பிடாரி அம்மன், விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டி சித்திரை மாதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக திருவிழா கொண்டாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர், ஆனால் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது மற்றொரு சமூகத்தினரால் பிரச்சனை உருவாக்கப்பட்டு திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் ஊர் பொதுமக்களின் சம்மதம் மற்றும் ஒப்புதல் இல்லாமல் தானாக முன்வந்து மாரியம்மன் கோவிலை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், அந்த சமூகத்தினர் கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற சமூகத்தினருக்கு வழிபடுவதற்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கூறி வருவதாகவும் எடுத்துரைத்துள்ளனர், இந்த சூழ்நிலையில் மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைத்து சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொதுவான நபர்களை உபயதாரர்களாக நியமித்து, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu