ஏற்காடு கோடை விழாவில் நாளை செல்லப்பிராணிகள் கண்காட்சி
பைல் படம்.
Salem News Today - சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்றுவரும் 46-வது கோடைவிழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாளை (27.05.2023) செல்லப்பிராணிகள் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
ஏற்காட்டில் 21.05.2023 முதல் 28.05.2023 வரை 8 நாட்கள் நடைபெறும் 46-வது கோடைவிழாவில் சேலம் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கு எண்.40-இல் 27.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு செல்லப்பிராணிகள் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
செல்லப்பிராணிகள் கண்காட்சியில் கிளி, பறவைகள், பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல்துறையைச் சார்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, இக்கண்காட்சியில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளை பெருமளவில் கொண்டு வந்து பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu