சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 530 மனுக்கள் அளிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 530 மனுக்கள் அளிப்பு
X

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று (30.10.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்களுக்கு சரியான பதிலை நிலுவையின்றி உடனுக்குடன் அலுவலர்கள் வழங்கிட வேண்டுமெனவும், மழைக்காலம் என்பதால் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத்துறையினரும் தங்கள் பகுதியில் மிகுந்த கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் காலை உணவுத்திட்டப்பணிகளை நாள்தோறும் தொடர்புடைய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிடவும், மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பெறப்படுகின்ற மேல்முறையீட்டு மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 530 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

30.10.2023 முதல் 05.11.2023 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, இன்று ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
how ai is transforming business intelligence