மார்ச் 8ல் மக்கள் நீதிமன்றம்..!

சேலம்:
சேலம் மாவட்டத்தில் மார்ச் 8ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.
சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்ட அறிக்கை:
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில் 2025ம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் நடைபெற உள்ளது. இது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக, சமரச முறையில் தீர்வு காண உதவுகிறது.
இந்த நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல், காசோலை, வங்கி கடன், கல்வி கடன், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்சினை, தொழிலாளர் நலன், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் ஆகியவற்றை மக்கள் நீதிமன்றத்தில் சமரச முறையில் தீர்வு கண்டு பயன்பெறலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu