சேலம் மாநகராட்சியில் நிலவரித்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பட்டா
சேலம் மாநகராட்சி பகுதியில் நகர நிலவரித்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாநகராட்சியில் 35 வார்டுகள் மற்றும் 1301 பிளாக்குகளுக்கு நகர நில அளவை வருவாய் பின் தொடர் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அரசால் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரால் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ள அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு சேலம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் ஏறபடுத்தப்பட்டு, இது சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டுவருகிறது.
சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டாதாரர்கள் இணையதளம் வழியாக தங்களிடம் உள்ள பதிவுப்பத்திர ஆவணங்களை கொண்டு மனு செய்து நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெற்றுக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இதன் வாயிலாக பட்டாக்கள் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu