சேலத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி .
சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சிசயர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய 4.0 தொழில்நுட்ப மையத்தை முன்னனி நிறுவனமான டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் மற்றும் மெக்கானிக் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய தொழிற்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டு, கணினி வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள். இதுதவிர, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்றுப் பயனடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகம் பொறியியல் கல்லூரிகளை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து வந்து இன்றைய நவீன காலத்திற்கேற்ப தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்க வேண்டும். எதிர்காலத்தில் தலைசிறந்த தொழில்நுட்பவியாளர்களை உருவாக்கிட முடியும்.
இதன்மூலம், மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு சேர்க்கை செய்யப்பட்டு வருவதுடன் பயிற்சி முடித்தவுடன் பயிற்சியாளர்களின் நலன் கருதி முன்னனி நிறுவனங்களுடன் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் / முதல்வர் இரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu