தேசிய கைத்தறி தினத்தையொட்டி, 60 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உ தவிகள் வழங்கல்

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, 60 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உ தவிகள் வழங்கல்
X

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்பு கைத்தறிக் கண்காட்சி.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உ தவிகளை மாவட்ட ஆட்சிய வழங்கினார்.

9வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, இன்று (07.08.2023) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சேலம் சரகத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணி இரகங்களின் சிறப்பு கண்காட்சி இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சேலம் சரகத்தில் பிரசித்திப்பெற்ற வெண்பட்டு இரகங்கள் மற்றும் பருத்தி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி இரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடும் வகையில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், கைத்தறித் துறையின் சார்பில் நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு ரூ.7.45 இலட்சம் மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகளும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு ரூ.14.73 இலட்சம் மதிப்பிலான திட்ட தொகைகளும், நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைகளும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 நெசவாளர்களுக்கு ரூ.72 இலட்சம் மதிப்பிலான பணி ஆணைகளும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் மற்றும் 2022-23-ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசின் விருது பெற்ற 6 கைத்தறி நெசவாளர்களை கௌரவித்தும் என மொத்தம் 60 நெசவாளர்களுக்கு ரூ.94.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி அவர்கள், சேலம் சரக கைத்தறித் துறை துணை இயக்குநர் மாதேஸ்வரன், சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சரவணன் உட்பட அரசு துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!