சேலத்தில் சுதந்திரவிழாவையொட்டி நாளை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்டத்தில் நாளை 15.08.2023 நடைபெற்றவுள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 2023 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 15.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றவுள்ளது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களைக் கௌரவித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்தும், சாலை பாதுகாப்பு, இயற்கையை பாதுகாத்தலின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இச்சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான பணிகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், நாளை நடைபெற உள்ள சுதந்திர தினத்தையொட்டி காவல்துறையினரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu