சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
X
சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்படட்ன. இது தொடர்பாக தாபா ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒமலூரை அடுத்த காமலா புரம் பிரிவு ரோடு அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் சிங் ஜாட்வால் என்பவரின் மகன் மான்சிங் தாபா ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் 12 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் ராஜஸ்தானி தாபாவில் இந்த வழியே பயணிக்கும் பலரும் சாப்பிட்டு செல்வது வழக்கம். இவர் சமீக காலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை காரில் கடத்தி வருவதாகவும் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் காமலாபுரம் பிரிவு அருகே அமைந்துள்ள ராஜஸ்தானி ஹோட்டல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினரைப் பார்த்ததும் ஒரு கார் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது. 2 கார்கள் பிடிபட்டன.

பிடிபட்ட காரைச் சோதனை செய்த போது அதில் மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. காவலர்கள் அந்த கார் உட்பட 2 கார்களை பறிமுதல் செய்து , ஓட்டி வந்தவரையும் கைது செய்தனர்

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தொடர்பாக தாபா உரிமையாளர் மான்சிங்கை கைது செய்தனர். மொத்தம் 5 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 9 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!