ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி.. கிரைம் செய்திகள்

ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி.. கிரைம் செய்திகள்
X

பைல் படம்

Salem News Today: ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem News Today: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (45). விவசாயியான இவவரது செல்போனுக்கு, தங்கள் நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளோம். இதற்காக முன்பணம் ரூ. 40 லட்சம் செலுத்த வேண்டும். நிலத்துக்கு மாத வாடகையாக ரூ. 40 ஆயிரம் வழங்குகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

இந்த தகவலையடுத்து, ரத்தினவேல், உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்போன் கோபுரம் அமைத்து கொடுப்பதற்கு நில ஆவணங்கள், ஆவண கட்டணம், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதனையடுத்து ரத்தினவேல், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கவில்லை.

பின்னர் குறுஞ்செய்தி வந்த எண்ணை ரத்தினவேல் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இந்த மோசடி குறித்து அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் கையில் பையுடன் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்து வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ஒடிசா மாநிலம் காந்தம்மாள் மாவட்டத்தை சேர்ந்த ராகுல்பிரதான் (வயது 44) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3, 780 ஆகியவை இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ராகுல்பிரதானிடம் போலீசார் விசாரித்த போது, அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும், அதை கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராகுல்பிரதானை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

ஓமலூர் அருகே காடையாம்பட்டி பேரூராட்சி 6வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கேலி கிண்டல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார்.

பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பிளாட்டுக்கு நைசாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, நடந்த சம்பவங்களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!