சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்

சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்
X

காட்டூர் ஆனந்தன்.

சேலத்தில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரின் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன். இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காட்டூர் ஆனந்த் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் அங்கிருந்து காட்டூர் ஆனந்தன் திரும்பியுள்ளனர்.

அவர் காட்டூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆனந்தன் மற்றும் பிரபாகரனை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காட்டூர் ஆனந்தனின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து கார் மூலம் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். அவருடன் சென்ற அவரது உறவினர் பிரபாகரன் படுகாயமடைந்தார். காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடி காட்டூர் ஆனந்தன் மீது கொலை வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ரவுடி ஆனந்தன் முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா? கொலை செய்யப்பட்ட கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!