சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர் தகவல்
X
சேலம் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

சேலம் புத்தகத் திருவிழா இன்று நிறைவடையுள்ள நிலையில் நேற்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா அரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்பேசியதாவது:

மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஆரோக்கியமான சமுதாயத்தை வடிவமைக்கவும், சிந்திக்கக்கூடிய பக்குவத்தையும் உருவாக்கவும், சுயசிந்தனை உடையவராக மாற்றவும், எழுதவும், பேசவும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகவும் இது போன்ற புத்தகக் கண்காட்சிகளை வடிவமைத்து வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து இந்த சேலம் புத்தகக் கண்காட்சியை நடத்தியுள்ளது. 1994-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியினை நான் முழுமையாக இருந்து பார்த்ததன் அடிப்படையில் மக்களை கவரும் வகையில் இந்த புத்தகக் கண்காட்சியினை சிறப்பாக உருவாக்க முடிந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களின் இந்த புத்தகக் கண்காட்சி அமைத்திட நிதியுதவி வழங்கியுள்ளதற்கு எனது மானமார்ந்த பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சேலம் மாவட்டத்திலுள்ள உள்ள அலுவலர்கள் முழு ஈடுபாட்டோடு இந்த புத்தகக் கண்காட்சியினை உருவாக்கியுள்ளார்கள்.

சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நகரத்தின் தற்போதைய பேசும் பொருளாக விளங்குகிறது. இப்புத்தகத் திருவிழாவில் முன் எப்போதுமில்லாத வகையில் வாசிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்துதரப்பினரும் பயன்பெறும் வகையில் உலகில் தலைசிறந்த ஓவிய அரங்குகள், புகைப்பட கண்காட்சி, உலக விருதுகள் பெற்ற புத்தகங்கள், திரையரங்குகள், கோள் அரங்கம் என பல்வேறு அரங்குகள் அமைக்கபட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.

சேலம் மாவட்டத்தின் வரலாறு குறித்த புத்தகங்களை கொண்டு ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்ற புத்தகம் இடம்பெற்றுள்ளது. நோபல் பரிசு வாங்கிய இப்புத்தகம் வாங்கிய பரிசு தொகை ரூ.8.01 கோடி ஆகும். இப்புத்தகத் திருவிழாவில் உலகில் உள்ள தலைசிறந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. உலகம் முழுக்க உள்ள எழுத்துக்களை படிக்க முடியாது ஆனால் பார்பதற்கும், படிப்பதற்கும் தூண்டுகோளாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. சாகித்திய விருது பெற்ற புத்தகங்கள், ஞான பீடா விருது பெற்ற புத்தகங்கள் என பல்வேறு விருது பெற்ற புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்புத்தகத் திருவிழாவில் 1,03,436 பள்ளி மாணவ, மாணவிகளும், 6,556 கல்லூரி மாணவ, மாணவிகளும், 4,332 ஆசிரியர்கள், 1,22,121 பொதுமக்கள் என மொத்தம் 14 நாள்களில் 2,36,446 நபர்கள் பார்த்து பயன்பெற்றுள்ளனர். மேலும், இப்புத்தகத் திருவிழாவில் 1,74,120 புத்தகங்கள் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் விற்பனையாகியுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியில் சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட தொழில் மையம், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, கல்வித்துறை, மகளிர் திட்டம், குழந்தைகள் பாதுகாப்புத்துறை, ஆவின், நுலகத்துறை, செய்தித்துறை, சுற்றுலாத்துறை, பெரியார் பல்கலைக்கழகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போக்குவரத்துறை, வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இப்புத்தகத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் எழுதுபவர்களையும், வாசிப்புபவர்களையும் ஊக்குவிக்கவும், ஒவ்வொறு நாளும் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து நாட்களிலும் ஒரு உள்ளூர் எழுத்தாளர்களின் நூல் வெளியிடப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும். இந்த புத்தகக் கண்காட்சி அமைய நிதியுதவி நல்கிய நிறுவனங்களுக்கும், பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்) கீதாபிரியா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil