சேலம் மகளிர் குழுவின் தட்டுவடை தயாரிப்பு சென்னையில் பரிசு பெற்றது

சேலம் மகளிர் குழுவின் தட்டுவடை தயாரிப்பு சென்னையில் பரிசு பெற்றது
X
சேலத்தில் மகளிர் குழுக்களின் முயற்சியில் புதிய சாதனை, மகளிர் குழுவுக்கு தட்டுவடை தயாரிப்பில் 2ம் இடத்திற்கான பரிசு

சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் "வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு கூட்டம்" நேற்று சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 90க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களின் 104 வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, 40க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்க சேய்தியாக, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் குழு விற்பனைப் பொருட்கள் கண்காட்சியில் சேலம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் தட்டுவடை தயாரிப்பில் சிறந்து விளங்கிய கொளத்தூர் துளசி மகளிர் குழுவிற்கு இரண்டாம் இடத்திற்கான பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மகளிர் குழுக்களின் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த இத்தகைய சந்திப்புக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story